கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கிய உணவுகர்ப்பிணி பெண்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவே சிசுவை ஆரோக்கியமாக வளரச் செய்யும். ஹார்மோன்ஸ் மாற்றத்தால் குமட்டல், வாந்தி, சோர்வு ஆகியன கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு.  அதற்கேற்ற சரிவிகித உணவு உட்கொள்வது சிசு வளர்ச்சிக்கு நல்லது. புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், தேவையான கொழுப்பு உணவு, வைட்டமின், நார்ச்சத்து உணவுகளை உண்ணுதல் அவசியம். அதுபோக பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலமும் தேவை.

இதன்படி சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதுடன், அதிக கலோரி உணவைத் தவிர்த்தல் நல்லது. உடல் எடை ஆரோக்கியத்துடன் அதிகரிக்க வேண்டும். தினமும் சுமார் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகளை நல்ல உணவால் சீர் செய்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது ஒரு கர்ப்பிணி பெண்ணின் பொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய உணவுகளை தோழி வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் பிரியா பாஸ்கர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சமையல் தொடர்பான செய்முறைகளை சில தமிழ் மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார் இவர்.

தொகுப்பு: ருக்மணிதேவி நாகராஜன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி