இறால் மாங்காய் குழம்பு



என்னென்ன தேவை?

இறால் - 1/2 கிலோ,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
தக்காளி - 2, புளி - 50 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
காய்ந்தமிளகாய் - 5,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
தனியாத்தூள் - 40 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
கடுகு - 10 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.