உளுந்து அல்வா



என்னென்ன தேவை?

உடைத்த உளுந்து - 1/4 கிலோ,
பச்சரிசி - 1/4 கிலோ,
முந்திரி - 50 கிராம்,
கிஸ்மிஸ் - 50 கிராம்,
கருப்பட்டி - 3/4 கிலோ,
நல்லெண்ணெய் - 250 மி.லி.,
நெய் - 200 மி.லி.
சுக்கு - 100 கிராம்,
ஏலக்காய் - 25 கிராம்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். சுக்கு, ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கி முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை வறுத்து கருப்பட்டி கரைசல், அரிசி, உளுத்தம் மாவை போட்டு நன்றாக கிளறவும். இத்துடன் சுக்கு தூள், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, நெய் ஊற்றி கலந்து இறக்கவும்.