இறைச்சி காட்டு வறுவல்என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ,
தேங்காய் எண்ணெய் - 200 மி.லி.,
கிள்ளிய காய்ந்தமிளகாய் - 50 கிராம்,
தனியா - 100 கிராம், சீரகம் - 30 கிராம்,
மிளகு - 10 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
கடுகு - 10 கிராம்,
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 200 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இஞ்சி, பூண்டு, சீரகம், தனியா, துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மண் சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, சின்னவெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை வதக்கி அரைத்த விழுது, மட்டன், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி மட்டனை வேகவிடவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.