இறைச்சி கூட்டு



என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ,
உருளைக்கிழங்கு - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 20 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
தேங்காய் எண்ணெய் - 200 மி.லி.,
பூண்டு - 10 பல்,
பட்டை, கிராம்பு - 1 துண்டு,
ஏலக்காய் - 2, சோம்பு - 20 கிராம்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
தனியாத்தூள் - 30 கிராம்,
சீரகத்தூள் - 20 கிராம்,
மிளகுத்தூள் - 10 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கசகசா - 10 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
தேங்காய் எண்ணெய் - 200 மி.லி.,
தக்காளி - 200 கிராம்,
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி.

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி பூண்டை சேர்த்து அரைக்கவும். வெறும் கடாயில் சோம்பு வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கசகசாவுடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறி சுத்தம் செய்த மட்டனை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முக்கால்பாகம் வெந்ததும் அரைத்த தேங்காய், கசகசா விழுது, உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து, உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.