குடல் வறுவல்என்னென்ன தேவை?

ஆட்டு குடல் - 1/4 கிலோ,
பச்சைமிளகாய் - 2,
சின்னவெங்காயம் - 200 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து கழுவி வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்னவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு ஆகியவற்றை சேர்த்து இடித்து கொள்ளவும். மிக்சியில் சீரகம், சோம்பு சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் இடித்த வெங்காய கலவையை போட்டு பச்சைவாசனை போக வதக்கி, சோம்பு, சீரக பொடியை போட்டு வதக்கவும். வெந்த குடல், உப்பு, கறிவேப்பிலை போட்டு கிளறி வறுவல் போல் வறுத்தெடுத்து சூடாக பரிமாறவும்.