நண்டு மிளகு ரசம்என்னென்ன தேவை?

நண்டு - 1/4 கிலோ,
சின்னவெங்காயம் - 100 கிராம்,
மிளகு - 25 கிராம்,
சீரகம் - 15 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
இஞ்சி - 1 துண்டு,
உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 200 கிராம்.

எப்படிச் செய்வது?

நண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். சின்னவெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாயை இடித்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இடித்த வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்கி, நண்டு, உப்பு போட்டு நன்றாக வதக்கி 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி பாதியாக வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.