ஆட்டுக்கால் இடி மிளகு ரசம்



என்னென்ன தேவை?

ஆட்டுக்கால் - 2 துண்டு,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 துண்டு,
காய்ந்தமிளகாய் - 20 கிராம்,
தனியா - 40 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
மிளகு - 10 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 20 கிராம்,
நெய் - 20 கிராம்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து உரலில் இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் + நெய் ஊற்றி சூடானதும் இடித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை, இடித்த மசாலா பொடி, மஞ்சள் தூள், 2 மட்டன் கால் துண்டுகளை நான்கு துண்டுகளாக நறுக்கி போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.