மட்டன் பொரிச்ச கறி



என்னென்ன தேவை?

எலும்பு நீக்கிய மட்டன் - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
தனியா தூள் - 40 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பொரிக்க தேங்காய் எண்ணெய்,
உப்பு - தேவைக்கு, நெய் - 50 மி.லி.,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மட்டன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி ஊறிய மட்டன் துண்டுகளை பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கி பொரித்த மட்டனை போட்டு கிளறி இறக்கவும்.