கொத்து இறைச்சி உருண்டைஎன்னென்ன தேவை?

நன்றாக கொத்திய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,
சின்னவெங்காயம் - 5 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு - 10 கிராம்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 10 கிராம்,
பொட்டுக்கடலை - 10 கிராம்,
முட்டை - 1.

எப்படிச் செய்வது?

சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் அனைத்தையும் நன்றாக கொத்தி கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கொத்திய இறைச்சி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், உப்பு, பொட்டுக்கடலை, முட்டை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து 30 கிராம் அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.