மூங்கில் அரிசி காய்கறி தோசை



என்னென்ன தேவை?

மூங்கில் அரிசி - 1 குவளை,
உளுந்து - 1/5 குவளை,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 25 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
கேரட் - 25 கிராம்,
குடைமிளகாய் - 25 கிராம்,
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
கரம்மசாலா பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மூங்கில் அரிசியை தனியாகவும், உளுந்துடன்வெந்தயம் சேர்த்து தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் தோசை  மாவு  பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, கேரட், குடைமிளகாய் வதக்கி மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், வத்தல் பொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்து வதங்கியதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் மூங்கில் அரிசி மாவை தோசையாக வார்த்து, அதன் மீது வதக்கிய மசாலாவை பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.