தினை புட்டுஎன்னென்ன தேவை?

தினை மாவு - 3 குவளை,
பச்சைப் பயறு - 1 குவளை,
தேங்காய்த்துருவல் - 1 குவளை,
வெல்லம்- 100 கிராம்,
நெய், உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?

தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, கொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் கொள்ளவும். பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.