கேழ்வரகு நெய் உருண்டை



என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 1/4 கிலோ,
வெல்லம் - 1/2 கிலோ,
வேர்க்கடலை - 100 கிராம்,
பொட்டுக்கடலை - 50 கிராம்,
வெள்ளை எள் - 4 டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்,
முந்திரி - 25 கிராம்.

எப்படிச் செய்வது?

வெல்லத்தை பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவை நெய் விட்டு வறுக்கவும். வறுத்த கேழ்வரகு மாவில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெள்ளை எள், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கலந்து, அதில் காய்ச்சிய வெல்லப்பாகை கலந்து ஆறவைக்கவும். பின்பு கையில் எண்ணெய் தடவி ஆறிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.