பூண்டு களி



என்னென்ன தேவை?

பூண்டு - 250 கிராம்,
பால் - 250 மி.லி.,
கருப்பட்டி - 300 கிராம்,
கடலை எண்ணெய் - 200 மி.லி.

எப்படிச் செய்வது?

பூண்டினை பாலில் நன்றாக வேகவைத்து ஆறவைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் காயவைத்து அரைத்த விழுது சேர்த்து கிண்டவும். இது நன்றாக வெந்து வந்தவுடன், அதில் கருப்பட்டி பாகு சேர்த்து கிளறி இறக்கவும்.