குதிரைவாலி வாழை இலை கொழுக்கட்டைஎன்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி மாவு - 1/2 கிலோ,
எள்ளு - 50 கிராம்,
நிலக்கடலை - 75 கிராம்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
வெல்லம் - 1/4 கிலோ,
நெய் - 20 கிராம்,
ஏலக்காய் - 10, எண்ணெய்,
உப்பு- சிறிது.

எப்படிச் செய்வது?

குதிரைவாலி அரிசி மாவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு, வெந்நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த்துருவல், எள்ளு, நிலக்கடலை சேர்த்து வறுத்து ஆறவைத்து, இத்துடன் பொடியாக்கிய வெல்லம் கலந்து பூரணமாக பிடித்துக் கொள்ளவும்.

ஒரு வாழை இலையை வட்டமாக நறுக்கி மேற்புரம் எண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் பிசைந்த குதிரைவாலி மாவை வைத்து வட்டமாக தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து அரை வட்டமாக மடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.