மூலிகை தேநீர்



என்னென்ன தேவை?

சுக்கு - 20 கிராம்,
தனியா - 20 கிராம்,
இஞ்சி - 30 கிராம்,
திப்பிலி - 1 டீஸ்பூன்,
புதினா - ஒரு கொத்து,
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
பனை வெல்லம் - 200 கிராம்,
தண்ணீர் - 1 லிட்டர்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தனியாவை வறுத்து இடிக்கவும். பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிக்சியில் புதினா, சிறிது நீர் விட்டு அரைத்து புதினா சாறு எடுத்து கொதிக்கும் தேநீரில் ஊற்றவும். இறுதியாக பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.