மணத்தக்காளி சப்பாத்தி



என்னென்ன தேவை?

முளைகட்டிய கோதுமை மாவு - 2 குவளை,
மணத்தக்காளி கீரை - 1 குவளை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமையை முளைகட்டி உலர்த்தி காயவைத்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மிக்சியில் மணத்தக்காளி கீரை, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அரைத்த கோதுமை மாவுடன் கலந்து, எண்ணெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு சம  அளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சப்பாத்திக் கல்லில் சுட்டு எடுத்து பரிமாறவும்.