கம்மங்கூழ்என்னென்ன தேவை?

கம்பு - 2 குவளை,
உப்பு - தேவையான அளவு,
தயிர் - 100 கிராம்,
சின்ன வெங்காயம்- 100 கிராம்.

எப்படிச் செய்வது?

கம்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய கம்பை மிக்சியில் சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க விட்டு பின் காய்ச்சவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு வாசனை வரும் வரை களி போன்ற பக்குவத்திற்கு நன்றாக காய்ச்சவும். பின் இதை 4-6 மணி நேரம் ஆறவைத்து பின் நீர் விட்டு கூழாக கரைக்கவும். நறுக்கிய வெங்காயம், தயிர் கலந்து பரிமாறவும்.