ஆரோக்கிய வாழ்வுக்கு...சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், உடலின் சர்க்கரை அளவை பெருமளவு கட்டுப்படுத்துகிறது. இந்த உணவுகள் பெரும்பாலும், ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைவாக (Low Glycemic Index) வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இவற்றை உண்பதால் உணவின் ‘பன்மைத்துவம்’ பாதுகாக்கப்படுவதால், பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு இந்த வகையான உணவுகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

‘திருக்குறள் உணவகம்’, சுரேஷ் மற்றும் கார்த்திகேயன் என்ற இரண்டு இளைஞர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் உள்ள திருக்குறள் உணவகத்துக்கு பல கிளைகள் உண்டு. அரிசி மற்றும் மூலிகைகளைக் கொண்டு 30 வகையான பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறைகளை தோழி வாசகர்களுக்காக வழங்குகிறது இந்த உணவகம்.

எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்