கறிவேப்பிலை ஜூஸ்



என்னென்ன தேவை?

கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
எலுமிச்சைப் பழம் - 1,
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்து அரைக்கவும். 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி, பனங்கற்கண்டு, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து பரிமாறவும்.