பேரீச்சம்பழ டிலைட்



என்னென்ன தேவை?  

பேரீச்சம்பழம் - 50 கிராம்,
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்,
ஆப்பிள் - 1,
தேன் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பேரீச்சம்பழத்தின் விதையை நீக்கி, நறுக்கிய ஆப்பிள் சேர்த்து அரைக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும். தேன் கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.