வாழைத்தண்டு ஜூஸ்



என்னென்ன தேவை?

வாழைத்தண்டு - 1 கப் (நார் எடுத்து சிறியதாக நறுக்கவும்),
தயிர் - 1/4 கப்,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, வடிகட்டி தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பரிமாறவும்.