கிரீன் ஆப்பிள் ஜூஸ்



என்னென்ன தேவை?

கிரீன் ஆப்பிள் - 1,
ஃப்ரெஷ் பாலக் இலை - 1/2 கப்,
வெள்ளரிக்காய் - 1,
எலுமிச்சைப்பழம் - 1,
உப்பு - சிட்டிகை,
தண்ணீர் - 1½ டம்ளர்.

எப்படிச் செய்வது?

எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்தெடுத்து உப்பு போட்டு வைத்துக் கொள்ளவும். நறுக்கிய ஆப்பிள், பாலக் இலை, நறுக்கிய வெள்ளரிக்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் மிளகுப் பொடி சேர்க்கலாம்.