மாதுளை மணப்பாகு



என்னென்ன தேவை?

பெரிய மாதுளம் பழம் - 2,
ஏலக்காய் - 8 (பொடிக்கவும்),
பொடித்த வெல்லம் - 400 கிராம்,
சிட்ரிக் ஆசிட் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மாதுளைப்பழ முத்துக்களை விதைகள் அடிபடாமல் மிக்சியில் அரைத்து வடிகட்டவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் விடவும். வெல்லம் நன்கு கரைந்து வந்ததும், சிட்ரிக் ஆசிட், ஏலப் பொடி சேர்த்து இறக்கவும். பின்பு வடிகட்டி நன்றாக ஆறவிடவும். ஆறியதும் மாதுளைப்பழ சாற்றை கலந்து குளிர்ந்த நீரில் கலந்து பரிமாறவும்.