ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்



என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெர்ரி - 10,
ஆரஞ்சு பழம் - 1,
பாலக்கீரை இலை - 4,
தேன் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாலக்கீரையை கழுவி வெந்நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும். ஸ்ட்ராபெர்ரியை சுத்தம் செய்து கீரையுடன் சேர்த்து அரைக்கவும். ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழத்தை ஜூஸ் எடுத்து, ஸ்ட்ராபெர்ரி ஜூஸுடன் கலந்து, தேன் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்.