பீட்ரூட் ஜூஸ்



என்னென்ன தேவை?

பெரிய பீட்ரூட் - 1 (நறுக்கவும்),
சின்ன வெங்காயம் - 1,
வினிகர் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்,
பட்டை - 1 துண்டு,
மிளகு - 5, கிராம்பு - 1,
வெள்ளரிக்காய் - 1.

எப்படிச் செய்வது?

பீட்ரூட், சின்ன வெங்காயம், வினிகர், சர்க்கரை, பட்டை, மிளகு, கிராம்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 3 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். வெள்ளரிக்காயை தோல் சீவி, ஊறிய பீட்ரூட்டுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வடிகட்டி பரிமாறவும்.