திராட்சை ஜூஸ்



என்னென்ன தேவை?

கருப்பு திராட்சை - 1/4 கிலோ,
பேரீச்சம்பழம் - 4,
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

திராட்சையை நன்றாக கழுவி கொள்ளவும். பேரீச்சம்பழத்தின் விதையை நீக்கி, திராட்சை சேர்த்து அரைத்து வடிகட்டி சோம்பு தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.