கொத்தமல்லி ஜூஸ்



என்னென்ன தேவை?

கொத்தமல்லித்தழை - 1 கப்,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
எலுமிச்சைப்பழம் - 1,
பனங்கற்கண்டு அல்லது உப்பு - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொத்தமல்லியை ஆய்ந்து இலை மட்டும் எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும். மிக்சியில் கொத்தமல்லித்தழை, இஞ்சி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இச்சாறை வடிகட்டியோ அல்லது அப்படியாகவோ எலுமிச்சைச் பழச்சாறு, உப்பு அல்லது பனங்கற்கண்டு ருசிக்கேற்ப கலந்து பரிமாறவும்.