புதினா ஜூஸ்



என்னென்ன தேவை?

புதினா - 1 கட்டு (இலை மட்டும்),
எலுமிச்சைப்பழம் - 1,
உப்பு - 1 சிட்டிகை,
வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - 1 இன்ச் துண்டு.

எப்படிச் செய்வது?

புதினா இலைகளை நன்றாக அலசி தண்ணீரை வடித்து இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். பின் வடிகட்டி வெல்லம், உப்பு சேர்த்து, தண்ணீர் 2 டம்ளர் கலந்து பரிமாறவும்.