ப்ரியங்களுடன்



குங்குமம் தோழி தரமான செய்திகளை வாசகிகளுக்குத் தந்து  இதழுக்கு இதழ் சபாஷ் போட்டு வரவேற்க வைக்கிறாள்.
- ஜி.ராஜேஸ்வரி, ஆதம்பாக்கம், சென்னை-88.

நாட்டின் முதல் பெண் ஆசிரியை ‘சாவித்திரிபாய் புலே’ பற்றின தகவல்கள் அருமை. இதுவரை நான் இவரைப்பற்றி அறிந்திராத  விஷயங்களை படித்து வியந்தேன்.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை-64.

வரலாற்றுத் தோழிகள் வரிசையில் வெளியாகியிருந்த நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் புலே அவர்களது இனிய வரலாறு  தேனாக இனித்திருந்தது. .
- V.மோனிஷா பிரியங்கா,தில்லை நகர், திருச்சி-18.

செல்லுலாய்ட் பெண்கள் தொடரின் மூலம், பெண்களின் தைரியம், தன்னம்பிக்கை பளிச்சிடுகிறது.செப்டம்பர் இதழ் முத்துக்கு முத்தாக,  கிச்சன் டைரீஸ், உயிர்வாழ உப்புச்சத்து, குங்குமம் தோழி குடும்ப தோழியாகி விட்டாள்.
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

‘வானவில் சந்தை’ சைக்கிள் வாங்குவதை குறித்து சில சந்தேகங்கள் கண்டேன். உடல்நலத்திற்கும் நல்லது. பணமும் மிச்சம்.
-வண்ணை கணேசன்,பொன்னியம்மன் மேடு்.

குங்குமம் தோழி பார்ட்டி ஸ்நாக்ஸ் இணைப்பு புத்தகம் சமைத்து சுவைத்து மகிழ பன்மடங்கு ஆர்வமும் ஆனந்தமும் கூட்டியது.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம், திருச்சி-6

‘சைக்கிள்’ என்றதும் எனக்கு, என்னுடைய அப்பாதான் நினைவுக்கு வருவார். வானவில் சந்தை. சைக்கிளின் சிறப்பை உணர்த்தியது.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம் அஞ்சல், கன்னியாகுமரி.

சென்னை ராபினும் திவானியும் செய்துவரும் இசைத்தொண்டு இசையையும், இளம் தலைமுறையினரின் திறமையையும் உலகறியச் செய்து  வருவது, வணங்கிப் போற்றத்தக்கது.
- புலவர் தியாக சாந்தன், திருச்சி-7.

தன் கணவன் தன்னை தவிக்கவிட்டு சென்றது பற்றி சிறிதும் மனம் தளராமல் சினிமாவில் நடித்து படிப்படியாக உயர்ந்த கே.ஆர்.செல்லம்  துணிச்சல் மிகுந்தவர்.
- ஏழாயிரம் பண்ணை, எம்.செல்லையா, சாத்தூர்.

அட்டையில்: ப்ரியா பவானி சங்கர்