ப்ரியங்களுடன்...



6வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‘குங்குமம் தோழி’க்கு வாழ்த்துகள்.
- கே.விஜயா, தர்மபுரி - 636 701.

‘செல்லுலாய்ட் பெண்கள்’- சகோதரிகள் மூன்று பேரும் அணிவகுத்து நின்ற அற்புதப் புகைப்படம் ‘தோழி’ தந்த பரிசு. பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும்், இன்னும் மனிதம் அழிந்துவிடவில்லை என்பதற்கு சான்று ‘நிவேதிதா’ உதவிய அத்தனை நல்லுள்ளங்களும் வணங்கப்பட வேண்டியவர்கள்.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள குங்குமம் தோழி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் தயாமணி பர்லாவின் பசுமை புரட்சி விலைமதிப்பற்றது.      
- வி. கலைசெல்வி, கரூர்.

மகளிர் தின ஸ்பெஷல் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. வெஜ் பேலியோ டயட் 30 வகை ரெசிபிகள் சூப்பர்.                   
- வி. மோனிஷா பிரியங்கா,  திருச்சி - 18.

ரசிகர்களே மறந்துவிட்ட கொல்லங்குடி கருப்பாயியை தேடிப் போய் பேட்டி எடுத்து மகளிர் தினத்திற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்.       
- வரலக்ஷ்மி, சென்னை - 37.

பெண்ணின் மேன்மை பக்கமெல்லாம் ஒளிர்ந்தது. ‘மண்ணின் மகள்’ மற்றும் இயற்கை முறையில் கீரை விவசாயம் இதயத்தில் பதிந்து விட்டது. பெண் பயணிகள் குதூகலம் ததும்ப நாங்களும் உடன் பயணித்த அற்புத அனுபவம் தந்தது.
- ஹரிணி முருகேஷ், தஞ்சாவூர் - 1.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்குத்தான் லைம்லைட் என்றில்லாமல் துப்புரவு பணியாளர், பூக்காரர், ஆட்டோ ஓட்டுனர் என எளிய பெண்களையும் பேட்டி எடுத்து, பெருமைப்படுத்திய தோழிக்கு் பாராட்டுகள்.
- மல்லிகா குரு, சென்னை.

பத்மினி குறித்து அளப்பரிய தகவல்களை தந்த பா.ஜீவசுந்தரி, லலிதா சம்பந்தப்பட்ட தகவல்களை அதற்கு நிகராக வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இனி ராகினி குறித்த எதிர்பார்ப்பை வாசகர்களிடம் ஏற்படுத்திவிட்டார்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

‘மண்ணின் மகள்’ ராஜேஸ்வரியின் வாழ்க்கை, இந்த மண்ணையும், மக்களையும் மட்டுமேதான் சார்ந்தது என தன் உழைப்பால் உயர்ந்து ‘பெண் குலத்தின் பொன் விளக்காய்’ ஜொலிக்கிறாரே - வாவ்!             
- மயிலை கோபி, சென்னை - 600 083.

கொல்லங்குடி கருப்பாயி வறுமையில் தவிப்பதையும், நடிக்க வாய்ப்பின்றி வாடுவதையும் படித்து கண்கலங்கினேன்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.