சித்த மருத்துவ குறிப்புகள் சில...



* மரு நீங்க
 
சதுரக் கள்ளிப்பாலை நம் உடலில் உண்டாகும் மரு மேல் தினமும் காலை நேரம் வைத்து வர  அவைகள் நாளடைவில் மறைந்து போகும்.

* குளிர் காய்ச்சல் நீங்க
 
அசல் காபிக் கொட்டையை வறுத்து இடித்து தூளாக்கி, ஒரு தேக்கரண்டி தூளை ஒரு டம்ளர் நீரில் ேபாட்டுக் காய்ச்சி டிகாஷனை எடுத்து, அதை அப்படியே குடித்துவிட வேண்டும். குளிர் காய்ச்சல் நின்று போகும்.
 
* தேனும் விளையாட்டுப் போட்டியும்

விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்பவர்களின் கால்கள் சோர்வடைந்து விட்டால், அடுத்து போட்டி ஆரம்பமாவதற்கு முன் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேன் உட்கொண்டு, பிறகு போட்டியில் கலந்து கொண்டால் புத்துணர்ச்சி உண்டாகும்.
 
* கொசுக்களை ஒழிக்க
 
மாம்பூக்களை சேகரித்து வேண்டும்பொழுது நெருப்பில் இட்டு புகைக்க அந்த வாசனை சகிக்காது கொசுக்கள் எல்லாம் ஓடிப் போகும்.

* கண் வியாதிகள் பரவும் போது
 
கண் நோய் வந்தவர்கள் உசிலை மரத்தின் இலையை தண்ணீரில் போட்டுக் காய்ச்சி கண்களை கழுவினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும்.
 
* நிற்காத பேதி நிற்க
 
சீனாக் கற்கண்டும், வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, இரவு படுக்கும்போது சாப்பிட்டு படுத்துக் கொள்ளவும். விடிந்ததும் பேதி நின்று போகும்.

- எஸ்.எழிலரசி, குடியாத்தம் - 632 602.