தாய்ப்பால் சுரக்க...



வாசகர் பகுதி

* 5 அல்லது 10 பாதாம் பருப்பு, கசகசா 1/2 டீஸ்பூன் சேர்த்து ஊறவைத்து அரைத்து, பசும்பாலுடன்  கலந்து சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
* பப்பாளிக்காய், வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் பருப்பு கூட்டு செய்து சாப்பிட்டு வர பலன் உண்டு.
* முளை கட்டிய தானியங்கள், உலர் பழங்கள், கோதுமை, கேழ்வரகு இவற்றுடன் வெல்லம் சேர்த்து அடை செய்யலாம்.
* உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். இளம் பிஞ்சு நூல்கோல் சமைத்து சாப்பிடவும்.
* அம்மான் பச்சரிக்கீரையும் பலன் தரும்.
* முருங்கைப்பூ கிடைக்கும் ேபாது காயவைத்து சேகரித்து வைக்கவும். பாலில் கொதிக்க வைத்து காலை, மாலை குடித்து வரவும்.
* வெந்நீரில் துணியை நனைத்து பொறுக்கும் சூட்டில் மார்பகத்தை துடைத்து விடவும்.
* மேல்பூச்சாக பூசுவதற்கு மாந்துளிர் இலை அல்லது பாகற்காயின் இலையை சுத்தம் செய்து மைய அரைத்து மார்பின் மீது பற்றுப் போடவும்.

- ந.சுலோச்சனா ராஜரத்தினம், தேனி.

உடல்நலம் காக்க...

கடுக்காய்

* மூலிகைகளில் சிறப்பு வாய்ந்தது கடுக்காய் ஆகும்.
* இதுவொரு பழமையான மரம்.
* இம்மரம் 25 மீட்டர் உயரம் வரை வளரும்.
* இதன் கனிகள் மஞ்சள் நிறத்தில் 4 செ.மீ. நீளத்தில் முட்டை  வடிவில் இருக்கும்.
* 4000 ஆண்டுகளுக்கு முன்பே கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
* இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை, அக்கோடம், அங்கணம், அந்தன், அபரணம், அபையன், அமரிதம், அமலை, அமுதம், அம்மை, அம்ருதா, அரபி, அரிதகி, அலியன், அவ்வியதா, இரேசகி என்ற பெயர்களும் உண்டு.
* ஆயுளை அதிகரிக்கும்.
* இளமையை தரும்.
* ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
* வாதத்தைக் கட்டுப்படுத்தும்.
* உடல் எடையை குறைக்கும்.
* கோழை, இருமல், நாவறட்சி தணிக்கும்.
* உடல் பலவீனம், மூட்டுவலியை சீராக்கும்.
* காயங்கள், தீப்புண்கள் ஆற்றும்.
* மலச்சிக்கலுக்கு நிவாரணி.
* வயிற்றுவலி, தலைவலி போக்கும்.
* நினைவாற்றலைப் பெருக்கும்.
* வாய் துர்நாற்றம் போக்கும்.
* பசியின்மை, நாவின் சுவையின்மை, பித்த நோய்கள் விலகும்.
* ரத்த பேதி சீராகும்.
* ஆண்களின் உயிரணு குறைபாட்டை சரியாக்கும்.

துளசி

* துளசியில் வெண் துளசி, கருந்துளசி என இரு வகைகள் உள்ளன.
* இந்த கருந்துளசியை கிருஷ்ண துளசி என்று கூறுவர்.
* தொண்டை நோய்கள், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் மற்றும் சருமம் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
* துருத்ரிகா துளசி சளி மற்றும் தொண்டை வறட்சிக்கு நிவாரணியாக உள்ளது.
* சதைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுவதால், வாத நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது.
* துகாஷ்மியா துளசி தொண்டைக் கோளாறுகள், குஷ்ட நோய்களுக்கு சிறந்தது.
* வெறும் வயிற்றில் ஐந்து துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், பல நோய்கள் நம்மை நெருங்காது.
* துளசி சுவாசத்தில் புத்துணர்வை அளிப்பதோடு, வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
* இதயம் சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

கண்டங்கத்தரி

* ஆஸ்துமா, இருமல் குறையும்.
* ரத்த அழுத்தம் சீராகும்.
உடல் புத்துணர்ச்சி பெறும்.
* கண் பார்வைக்கு நல்லது.
* காய்ச்சலுக்கு நிவாரணமாகும்.
* கை, கால் வீக்கம் தணியும்.
* சளி வெளியேறும்.
* சிறுநீர் பெருக்கும்.
* சிறுநீரகக் கற்களைக் கரைக்க உகந்தது.
* செரிமான  சக்தியைத் தூண்டும்.
* வாதம் கட்டுப்படும்.
* வாயு அகலும்.
* வியர்வையை உண்டாக்கும்.
* பசியை ஊக்குவிக்கும்.
* தலைவலி, தொண்டை வலி, பல்வலி, மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை-கால் வலியை கட்டுப்படுத்தும்.

கறிவேப்பிலை

* கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உள்ளது.
* காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை உட்கொண்டால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
* ஒரு பேரீச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
* தினமும் காலை கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
* கறிவேப்பிலை கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
* நீண்டநாள் செரிமான பிரச்னையை நீக்க, அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை  மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்னை அறவே நீங்கி விடும்.
* கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம். முடி நன்கு கருமையாகும்.
* கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறி விடும்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)