பாலூட்டும் அறை தேவை



வாசகர் பகுதி

சென்ற வாரம் மதுரைக்கு ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நல்ல பெரிய ஹாஸ் பிட்டல்தான். என் அருகில் ஒரு பெண் கையில் 6 மாதக் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். குழந்தையின் அழுகை தாங்க முடியவில்லை. நான் அவளிடம் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு சொன்னேன். அவளோ எழுந்து ஒரு நர்ஸிடம் “குழந்தைக்கு பால் கொடுக்கணும், இடம் இருக்கிறதா?” என கேட்க, அவர் ஒரு கேஷுவாலிட்டி ரூமை காட்டி ‘‘இங்கே போய் கொடுங்க” என்றார்.

அங்கே கட்டிலில் குழந்தையை படுக்க வைத்து அவளும் அமர, அவளுக்கு நேராக சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்து அவள் பால் குடுக்காமலே வந்துவிட்டாள். இச்சம்பவம் மனதை உருக்கியது. ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் அதற்கென ஓர் அறைகூட இல்லை. குறைந்தது ஒரு போன் பூத்போல சின்ன அறையாவது இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பஸ் ஸ்டாண்டில்கூட ‘தாய்மார்கள் பால் கொடுக்கும் அறை’ என்று ஒன்று உள்ளது. தாய்மார்களின் தேவைகளை இந்நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

- நாஜியா ஜீமன் அஹமது, கம்பம்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)