ப்ரியங்களுடன்...



‘நிம்மதியில்லா முதுமைக் காலம்’ கண்களை கசியச் செய்தது. மருத்துவமனை ஊழியர் பானுமதியின் வார்த்தைகள் வாழ்க்கையின் நிஜத்தைக் கூறியது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

பானுமதியின் சேவையை கண்டு என் மனம் நெகிழ்ந்தது.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

ஈ.வி.சரோஜா வாழ்விலும் எவ்வளவு சுக துக்கங்கள்! விவரமான விளக்கங்கள் வியப்பூட்டின.
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

‘வொண்டர் வுமன்’ படம் பற்றிய கட்டுரை பிரமிப்பை ஏற்படுத்தி விட்டது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

விமானம், அறிவியல், வர்த்தகம் எனப் பல துறைகளில் வித்தகராக பரிமளித்த உஷா ரகுநாதனின் துணிச்சல் அசாத்தியமானது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

பானுமதி சொன்ன ‘இருக்குற வரைக்கும் அன்பா, பாசமா இருப்போம். போகும் போது எதைக் கொண்டு போகப் போறோம்’ என்ற வரிகள் அருமையோ அருமை.
- எஸ்.வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

தென்னிந்தியாவின் முதல் பெண் விமானி உஷா ரகுநாதன் குறித்த தகவல்கள் ஒட்டுமொத்த பெண்ணினத்தையே பெருமைப்பட வைப்பதாக இருந்தன.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை ‘வேண்டாம் சிசேரியன்’.
- எஸ்.விஜயலஷ்மி ரவீந்திரன், ஈரோடு.

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை கதையை வெளி உலகத்திற்கு தெரியவைத்த தோழியே! மிக்க நன்றி.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

தென்னிந்தியாவின் முதல் பெண் விமானி உஷாவின் அனுபவங்கள் சுவாரஸ்யம்.
- மயிலை கோபி, அசோக் நகர்.

ஆதார் அவசியமா கட்டுரையில் பெரும்பாலோர் ஆதாரை விரும்பவில்லை என்றேதான் தோன்றியது.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்றுதான் பாடல் கேட்டிருக்கிறோம். கையிலே கலைவண்ணம் கண்ட சுதா செல்வகுமார் பாராட்டுக்குரியவர்.
- ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.