யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...



-ஜெ.சதீஷ்

தற்போது கலக்கல் டிசைன்களில் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டைலிஷ் கைகடிகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அணியும் உடைக்கு ஏற்றவாறும் உடையின் நிறம் என்னவோ அதே நிறத்தில் காலணிகள் அணிவது, கம்மல் அணிவதும்தான் இன்றைய ட்ரெண்ட். வாட்ச்களும் அதே நிறத்தில் கிடைத்தால் இன்னும் அட்டகாசம்தான்.

சென்னையில் உள்ள அனைத்து மால்களிளும் ஸ்டைலிஷ் கைகடிகாரங்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான டிசைன்களில் மனதைக் கவரும் வண்ணங்களில் செய்யப்பட்ட வாட்ச் பட்டைகள்தான் தற்போது அனைவரையுமே கவர்ந்து வருகின்றன. கிராண்ட் லுக் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற கைகடிகாரங்களின் வருகை ஏராளம்.

வைரக்கல் பதித்த கைகடிகாரங்கள் ஜுவல்லரி பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. புடவை அணிபவர்களுக்கு ஏற்றவாறு டிரடிஷனல் கைகடிகாரங்கள் மனதை அள்ளுகின்றன. புடவையின் வண்ணத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து கலர்களிலும் பட்டு ஜரிகைகளால் செய்யப்பட்ட வாட்ச் பட்டைகள் பட்டையைக் கிளப்புகின்றன.

இனி உடைக்கு மேட்சாக வாட்சை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பட்டையை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். பிரேஸ்லெட் மாடல்களில் இருக்கும் கைகடிகாரங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு டிசைனில் கிடைக்கிறது. வளையல் போடுபவர் சிலர் வாட்ச் அணிவதைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் இனி அந்த கவலையே இல்லை வளையல்களைப் போலவே அறிமுகமாகி இருக்கிறது இன்னொரு மாடல்.

அசத்தலான வேலைப்பாடுகளில் வித விதமான டிசைன்களில் சந்தைக்கு வந்திருக்கும்  லெதர் கைகடிகாரங்களுக்கு செம மவுசு. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் புது வரவான லேடீஸ் வாட்ச்கள் களைகட்டுகின்றன. சுமார் 299 ரூபாய் முதல் 1000 ரூபாக்கு மேல் அவரவர்களின் பட்ஜெட்டுகளுக்கு ஏற்றவாறு கிடைக்கின்றன. 

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்.