சர்க்கரை இனிக்கிற சர்க்கரை...



மாறிவரும் வாழ்க்கைச் சூழலில், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய் மிக சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. நமது உணவுப் பழக்க வழக்கமே இதற்கு முக்கியக் காரணம். சர்க்கரை நோயின் பிடியில் இருந்து மீள,சர்க்கரை நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் உணவில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை...

இவற்றைப் பின்பற்றி, நேரம் தவறாமல் சாப்பிடுவதுடன், ஒரே நேரத்தில் நிறைய உணவை உண்ணாமல், இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஒரு தரம் காய்கறி சூப், மோர் போன்ற பானங்களையும் பருகுவதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதுடன் சர்க்கரையின் அளவும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சேர்க்க வேண்டியவை
கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி, சோளம், குதிரைவாலி, வரகு, சாமை, பனிவரகு, தினை, சிறுதானிய மாவு, பாதாம், அக்ரூட், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியது
பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, இனிப்பு, ஸ்நாக்ஸ் எனப்படும் வறுத்த உணவுகள்.

சேர்க்க வேண்டிய எண்ணெய்
கடுகு எண்ணெய், சன் ஃப்ளவர் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில், செக்கு எண்ணெய்

தவிர்க்க வேண்டிய எண்ணெய்
ரீஃபைண்ட் ஆயில்

சேர்க்க வேண்டிய இயற்கை உணவு
வெந்தயம், பாகற்காய், சுண்டைக்காய், வேப்பக்கொழுந்து.

தவிர்க்க வேண்டிய வெள்ளை உணவு
தேங்காய், சீனி, உப்பு, மைதா.

 
தொகுப்பு: அமுதா செந்தில்குமார்.