ப்ரியங்களுடன்...



‘உடல் தானம்’ குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்படவில்லை. ‘தோழி’ அதற்கான முதல் மணியை அடித்திருக்கிறாள். பாராட்டுகள்.                                            
 - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘நீராலானது இவ்வுலகு’ தொடரில் மு.வெற்றிச்செல்வன் - சூழலியல் வழக்கறிஞரின் அறிவுரைகள் மிகச்சிறந்த ஆலோசனைகளாகவும் உள்ளன.
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

சாதிக்க நினைப்பவர்களுக்கு உந்துசக்தியாகத் திகழும் சிவசங்கரியின் உழைப்பு, சாதனை அளப்பரியது.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

எழுத்தாளர் சிவசங்கரியின் அனுபவ பேட்டியும் வந்தால் நன்றாக இருக்குமே என்று போன இதழிலேயே எண்ணினேன். என் ஆவலை தீர்த்து வைத்து விட்டாள் தோழி!
- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

ஊசிமுனை ஓவியங்கள் கண்டேன். அடேயப்பா என வியக்க வைத்தன.                                
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மொடையூர் என்ற சிற்பிகளின் கிராமத்தினை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்த குங்குமம் தோழிக்கு நன்றி!
- வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.

சிற்பக்கலையில் மொடையூர் செல்வி, கடலூர் விஜயலட்சுமி என பெண்கள் அதிகம் தொடாத வேலையை தொட்டிருப்பது, ‘பெண்ணின் பெருமை’யைக் காட்டியது.
- மயிலை கோபி, அசோக் நகர்.

அசோகமித்திரன் - அஞ்சலி கண்களில் நீரை ததும்பச் செய்து விட்டது. நடிகை  ஜி. வரலட்சுமி பற்றிய பல அறிய, புதிய செய்திகளை பா.ஜீவசுந்தரி அள்ளித் தந்திருந்தது ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை நிரூபித்து உள்ளது. ‘பிரசவ கால கைடு’ இன்றைய இளம்வயது தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
- சுகந்தி நாராயண், வியாசர்நகர்.

உடல் தானம் பற்றிய விளக்கம் அருமை. வழிகாட்டிய தோழிக்கு நன்றி.
- லஷ்மி ரகுநாத், அண்ணாநகர்-600 040.

சாதி வெறி தங்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை இனியேனும் உணர்ந்திருப்பார்களா கௌசல்யாவின் பெற்றோர். இந்த சாதி வெறி தேவையா?
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.