சரித்திரம்... சாகசம்... சந்தோஷம்!





இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பை, மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர். பல்வேறு மக்கள் வாழும் பரபர பிசினஸ் நகரம். சுட்ட சோளத்தைச் சுவைத்தபடி மரைன் டிரைவில் நடந்து சென்றால் நேரம் போவதே தெரியாது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், நீந்தி விளையாடும் மனிதர்கள், தூரத்தில் தெரியும் உயர்ந்த கட்டிடங்கள் என்று ரசனையான இடம் இது.

மும்பை என்றதும் நினைவுக்கு வருவது இந்தியாவின் நுழைவு வாயில். கடற்கரையை ஒட்டியிருக்கும் ‘கேட் வே ஆஃப் இந்தியா’ அருகில் நின்றால் ஒரு பக்கம் தாஜ் ஹோட்டல் போன்ற பிரமிப்பு, இன்னொரு பக்கம் கடலில் சிறியதும் பெரியதுமான அழகுப் படகுகள்... வாயிலில் தானியங்களைக் கொறித்தபடி சிரிக்கும் ஆயிரக்கணக்கான சாம்பல் புறாக்கள். சுமார் 10 கி.மீ. படகில் பயணித்தால் எலிபெண்டா தீவை அடையலாம். அங்கு சிறிது தூரம் மலைப்பாதையில் நடந்தால் பழங்கால குகை. பெரிய சிற்பங்கள் கொண்ட அழகான அமைப்பு அது.

சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகம், ஜவஹர்லால் நேரு பிளானட்டோரியம், ஜுஹு கடற்கரை, வாட்டர் வேர்ல்டு, உயிரியல் பூங்கா, பிரிட்டிஷ் கட்டிடங்கள், கேலரிகள், பூங்காக்கள், கோயில்கள் உள்பட பார்க்க வேண்டிய இடங்கள் மும்பையில் ஏராளம்.

எப்படிச் செல்லலாம்?    எத்தனை
நாள்கள்?    எப்போது
செல்லலாம்?    என்ன
வாங்கலாம்?    என்ன
சாப்பிடலாம்?    அருகில்
உள்ள இடங்கள்?
ரயில் மற்றும் விமானத்தில்.    மும்பையை முழுவதும் சுற்றிப் பார்க்க குறைந்தது 4 நாள்கள் தேவைப்படும்.


    எல்லா காலங்களிலும் செல்லலாம்.    துணிகள், கோலாபுரி செருப்புகள், வால்ரி ஓவியங்கள் (சோர் பஜார், ஜாவேரி பஜார், கொலாபா காஸ்வே, ஃபேஷன் தெரு, க்ராவ்ஃபோர்டு மார்க்கெட்)    மராத்தி மதிய உணவு, வடா பாவ், பாவ் பாஜி, பானி பூரி, ஈரானி டீ, அல்போன்சா மாம்பழம், மீவத் ஐஸ்க்ரீம்.    அஜந்தா, எல்லோரா (குகை ஓவியங்கள்), சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, போர் பறவைகள் சரணாலயம்... இன்னும் பல கோட்டைகள், மலை வாசஸ்தலங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன.