ப்ரியங்களுடன்





குழந்தை வளர்ப்பு குறித்த ‘செல்லமே’ மிகவும் அவசியமான பகுதி. ‘மாசறு பெண்ணே வருக’ என்ற அழகுப் பகுதி அருமை.
- வே.அருணாதேவி, வடபாதிமங்கலம்.

சிவப்பு ரோஜாக்கூட்டமாக கண்ணைப் பறித்தது அட்டைப்படம்! வேலைச்சுமையில் தன்னை மறந்த கணவருக்கு பூர்ணிமா பாக்யராஜ் தந்த ட்ரீட்மென்ட், பாக்யராஜ் படத்தின் க்ளைமேக்ஸ் போலவே சூப்பர்!
- சி.ஜெரினாகாந்த், சென்னை-16, கீதா பிரேமானந்த், சென்னை-18 மற்றும் சுபா சதீஷ், செட்டிகுளம்.

‘நடுவானில் தேவதைகள்’ கவர் ஸ்டோரி, ‘ஏர்ஹோஸ்டஸ்’ என்ற சவால்மிக்க பணியில் கலக்கி வரும் தேவதைகளின் சாதனைகளையும் கனவுகளையும் லட்சியங்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியிருந்தது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘கிளாசிக் தீபாவளி ஸ்பெஷல்’ படு அமர்க்களம். ‘மகிழ்ச்சிப் பொறி’ கட்டுரையைப் படித்தேன். சுயநலமிக்க இன்றைய சமுதாயத்தில் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற உயரிய கோட்பாட்டுடன் ‘சிறாக்’ அமைப்பை நடத்தி வரும் அந்த அன்புச் சகோதரிகளின் தொண்டு மனப்பான்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

ராதிகாவின் பேட்டி, ஒரு வெற்றிப் பெண்மணியின் வாழ்க்கைச் சரிதம். மூளை பலம், உழைப்பு, தன்னம்பிக்கை மூன்றையும் கொண்ட தனித்துவம் மிக்க பெண்மணி அவர். ‘செல்லமே...’ சீரியல் முடிந்ததும் பிரேக்கா? வேண்டாம்... பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தைரியத்தை நிறுத்தி விடாதீர்கள்!
- கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி.

ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘24 மணிநேரம்’ வியக்க வைக்கிறது. இவரைப் பற்றிய முன்னுரை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. மலாலா கட்டுரை கலங்க வைத்தாலும், மற்ற பெண்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. ‘மேப் சப்பாத்தி’ என்றவுடன் ஏதோ புதுசாக சொல்லித்தரப் போகிறார் என்று நினைத்தால், அனுபவத்தை வேடிக்கையாகச் சொல்லிவிட்டாரே நளினி! பள்ளி அருகில் இருந்தால் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு வசதி கிடைக்கிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
- ராஜி குருசுவாமி, சென்னை-88, வி.ஜி.ஜெய்ஷ்ரீ, சென்னை-21 மற்றும் வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி.

பலவிதமான கேள்விகளுக்கு அருமையான பதில் தரும் ‘கேள்வியின் நாயகி’க்கு ஒரு சல்யூட். தங்கம் ‘கி tஷீ ஞீ’ பெஸ்ட். ஆஸ்துமாவை கட்டுப்படுத்த பயனுள்ள தகவல் தந்தது ‘ஹெல்த்’. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாடல் அரண்மனை!
- எஸ்.வளர்மதி, லெஷ்மிபுரம்.

கிருத்திகா ராதாகிருஷ்ணனின் ‘தீபாவளி ஸ்பெஷல் 30’ இலவச இணைப்பு தீபாவளிக்கு புது அர்த்தம் தந்துவிட்டது.
- சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்.

‘சினிமா ராணி’ என சிறப்பிக்கப்பட்ட ராஜலஷ்மி, திரைத்துறையில் பல விஷயங்களில் முதல் பெண்மணி என்பது ஆச்சரியம்!
- சு.நவீனா தாமு, பொன்னேரி.