கலர் கலர் what கலர்!
வாடாமல்லி கலரு, மயில் கழுத்து கலரு, பாசிப்பயறு பச்சை... இப்படி நாம நம்மூருக்கு நல்லா தெரிஞ்ச அறிஞ்ச விஷயத்தை கொண்டே வண்ணங்களை சொல்றோம்... இதுபோலவே ஆங்கில மொழியிலும் சில குறிப்பிட்ட கலர் உண்டு. அவற்றில் சில...
Teal
இந்த கலர் பெரும்பாலும் பல கார்பரேட் கம்பெனிகளின் உட்புற வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு greenish-blue வண்ணம். Common Teal என்பது ஒரு வெளிநாட்டுப் பறவை. அந்தப் பறவையின் கண்ணைச் சுற்றி இந்த பச்சை+நீல வண்ணம் இருக்கும். அதனால் இந்த greenish-blue கலருக்கு Teal என்று பெயர் வந்தது.
Vermilion
நெற்றி வகிட்டில் பெண்கள் வைக்கும் குங்குமம் எப்படி பளிச்சிடும்? அந்த பளிச் சிவப்பு நிறத்தின் பேருதான் Vermilion. இந்த வண்ணத்தின் பெயரையே நம்மூரு குங்குமத்துக்கும் ஆங்கிலத்தில் வைச்சுட்டாங்க. கொசுறு தகவல்: Mercury மற்றும் sulfur... இந்த ரெண்டு பொருட்களையும் கலந்தால் இந்த அடர் வண்ணச் சிவப்பு வருமாம்.

Periwinkle
அழகான இளநீல வண்ணப் பூவை உடைய ஒரு செடியின் பெயர் இது. கண்ணை உறுத்தாத அழகிய நீல கலருக்கு இந்தச் செடியின் பெயரையே வைத்துவிட்டார்கள். மேலும் ஒரு வகையான நத்தையின் பெயரும் Periwinkleதான்.
Capri
பகலில் கடல் தண்ணியை பார்க்கும் போது எப்படி இருக்கும்? அழகான நீல வண்ண நிறம் கண்ணைப் பறிக்கும் இல்லையா? இந்த வண்ணத்துக்குப் பேருதான் capri. Azure மற்றும் cyan அப்படின்னு ரெண்டு வகை நீல நிறம் இருக்காம். இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நீல வண்ணம்தான் இந்த capri. இத்தாலி பக்கத்தில் உள்ள ஒரு அழகிய தீவின் பேருதான் capri. இந்தத் தீவின் அழகிய நீல வண்ண கடல்தான் இந்த நிறத்துக்கு பெயரிட தூண்டுகோலாக இருந்ததாம்!
Burgundy
நம்மூரு அரக்கு கலர்தாங்க இந்த Burgundy. சாம்பல் கலந்த அரக்கு கலரில் இருந்து அடர் வண்ண purple கலர் வரை இருக்கும் (grayish red-brown to dark blackish-purple) எல்லா நிறத்துக்கும் இதே பேருதானாம். பழமையான வைன், நம்மூரு விஸ்கி, பிராந்தி ஆகியவற்றின் நிறம் எல்லாமே இந்த வகை வண்ணத்தில் அடக்கம்.
(வார்த்தை வசப்படும்!)
|