கற்பது கற்கண்டே!
விமலா சஞ்சீவ்குமார்
குரு!
எத்தனையோ ஆசிரியர்களிடம் கற்பதை விட, மற்றவரிடம் கற்றுக்கொள்வதைவிட, தெரிந்து கொள்வதை விட, தானாக கற்றுக்கொள்வதை விட, எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை என் மகனிடம் கேட்டு, தெரிந்து, கற்றுக்கொள்வதுதான் மட்டற்ற மகிழ்ச்சியும் கர்வமும். எனக்கு குழந்தையாக தெரிந்தாலும், ‘நானும் வளர்கிறேன்’ என்று எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான் பல விஷயங்களில்!

ஒரு டெஸ்ட்...
இப்போ என் ஸ்டூடன்ட்ஸுக்கு சின்ன டெஸ்ட் வெச்சேன். அவங்க வர்றதுக்கு முன்னவே போய் பேப்பர் எல்லாம் வெச்சுட்டு காத்து இருந்தேன். மொதோ ரெண்டு பொண்ணுக வந்து உக்காந்து, நான் அசந்த நேரத்துல, பேப்பர் திருப்பிப் பார்த்து அதை போட்டோ எடுத்துட்டு, என்கிட்ட, ‘கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் ப்ளீஸ்’னு சொல்லுச்சு. நானும் ‘சரி’ன்னேன். வெளிய போய் போட்டோ எடுத்த கேள்விகள் எல்லாம் படிச்சுட்டு வந்து திரும்ப உக்காந்தது. வெளிய போன நேரம் நான் அதோட பேப்பர மாத்தி வெச்சுட்டேன். வந்து பேப்பர் பார்த்தால், கேள்விகள் மாறி இருந்தது பார்த்து அதிர்ச்சி! ஒரு கிளாஸுக்கு 36 பொண்ணுகனா நான் 4 விதமான கேள்விகளை பிரின்ட் பண்ணி காப்பி அடிக்க முடியாதபடி செஞ்சுடுவேன். பக்கத்துல உக்காந்தா கூட அவங்க காப்பி அடிக்க முடியாது! # யாருகிட்ட
வாழ்க்கை எனும் தோசை
சில நேரம் நாம தோசை போடலாம்னு நினைச்சுப் போட்டா, அத நாம கொஞ்சம் கண்டுக்காம விட்டா ரோஸ்ட்டாகவும், கவனக்குறைவா இருந்தா ஊத்தப்பமாகவும் ஆக சான்ஸ் இருக்கு. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.இன்னைக்கு நான் தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம் சாப்பிட்டேன்!
எப்படி?!
வேலையே இல்ல... எல்லாம் முடிச்சுட்டேன்... ஆனாலும், செம வேலைகள் இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி!!!
அதானே!
படிப்படியா படிக்கட்டுல ஏறினாலே பொறுக்கலையே... இனி நாம லிஃப்ட் அல்லது எக்ஸ்கலேட்டர்ல போனா இந்த உலகம் தாங்குமா?
|