முத்தாரம் Miniவிளையாட்டு வீரர்கள் வருமானவரி கட்டிவரும் நிலையில் எதற்காக தனியாக 33% வரியை அரசுக்குத் தரவேண்டும்?  

அரசுக்கு வரி கட்டுவது குடிமகன்களின் கடமை. விளையாட்டு வீரர்கள் வணிக ரீதியில் பெறும் வருமானத்தில் சிறுபகுதிதான் வரி. அரசின் பிற துறை பணியாளர்களுக்கும் இதே விதிதான்.
 
வரி விதித்தால் விளையாட்டு வீரர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடாதா?  

தேசத்தின் பெருமைக்காகவும் ஆர்வத்திற்காகவும் மட்டுமேவா வீரர்கள் விளையாடுகிறார்கள்? வரி, மாநில அரசின் வேலைவாய்ப்பை பெற்ற விளையாட்டு வீரர் களுக்கானது. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை அரசின் சட்டம் பாதிக்காது.
 
பரிசும், அரசு வேலையும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க போதுமா?  

சுசில்குமாரைத் தவிர வேறு எந்த வீரரும் இருமுறை ஒலிம்பிக்கில் மெடல் வெல்லவில்லை. ஒலிம்பிக்கில் தங்கமெடல் வென்றவருக்கு அரசு 6 கோடி ரூபாய் வழங்கியது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை, பணப்பரிசு மிக முக்கியமான ஒன்று.

அரசு வளர்த்தெடுத்த விஜேந்தர்சிங், தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளுக்குச் சென்றுவிட்டார். அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தும் இத் தகைய வீரர்களுக்காகவே அரசு ஏப்ரல் 30 அன்று புதிய வரி சட்டத்தை அமுல்படுத்தியது.

-அசோக் கெம்கா, முதன்மைச் செயலர், ஹரியானா.