வெனிசுலாவில் ராணுவக்கலகம்?வெனிசுலாவில் மே.20 அன்று புதிய  அதிபராக  தேர்தலில்  வென்ற  நிக்கோலஸ்  மதுரோ பதவியேற்றார். தொடக்க உரையில் வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றிலிருந்து விலகுவதாக கூறி ஜூன் 1 அன்று 39 அரசியல் கைதிகளை விடுவித்தார்.

மதுரோ அரசை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், வங்கியாளர்கள், பிற  துறையினர் என மொத்தம் 340 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்கிறது மனித உரிமைகள் அமைப்பு. எதிர்ப்பின்றி ஜெயிக்க எதிர்க்கட்சிக்காரர்களை ஜெயிலில் அடைத்த மதுரோ, தற்போது அவர்களை விடுவிக்க காரணம் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான்.

இவ்வாண்டில் மட்டும் ராணுவத்தைச் சேர்ந்த 35 கலக அதிகாரிகள் கட்டம் கட்டி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தைக் காப்பாற்ற ராணுவத் தலைவர்களை உதவக்கோரிய  எதிர்க்கட்சி களிடமிருந்து அரசைக் காப்பாற்ற அமைச் சரவையில் ராணுவ ஆட்களாக நிரப்பிவருகிறார் மதுரோ.

விடுவிக்கப்பட்டாலும் அனைவரும் வெளிநாட்டுக்குச் செல்ல தடையுள்ளதோடு, தினசரி நீதிமன்றத்தில் கையெழுத்தும் போடவேண்டும். லோபஸ் எதிர்க்கட்சித் தலைவராக புகழ்பெற்றவராக இருந்தாலும் அவரும் வீட்டுச் சிறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.