சோவியத் தயாரிப்பு!




ATMOSFERA PORTABLE TRANSISTOR RADIO // 1959-1961

சோவியத்  ரஷ்யாவின் முதல்  ட்ரான்சிஸ்டர் ரேடியோ. ஐரோப்பா, அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள ரேடியோக்களை வாங்கி வந்த வடிவமைப் புத்துறை அதை அப்படியே காப்பியடித்து செய்த உள் நாட்டுத் தயாரிப்பு.. ரேடியோ, கேமரா,கார்,ஸ்கூட்டர் என அனைத்துமே இதேமுறையில் மேட் இன் ரஷ்யாவாக உருவாயின.

BELKA A50 (SQUIRREL) COMPACT CAR PROJECT // 1955-1956

4 பயணிகள் பயணிக்கும் பெல்கா கார், தயாரிக்கப்பட்டதே  ஐந்தே ஐந்து கார்கள்தான். அரசு பியட்-600 காரை ரீமாடல் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டதே காரணம். அக்காரை நகலெடுத்து உருவானதுதான் ZAZ-965 என்ற மாடல் கார்.

AVOSKA STRING SHOPPING BAG // 1950-1980s

மீன் பிடிக்கும் வலை டிசைனில் பர்ச்சேஸ் செய்வதற்கான பை. பாக்கெட்டில் மடித்து வைத்து எடுத்துச் செல்லும் இப்பை 1980 ஆம் ஆண்டு பாலிதீன் பைகள் பரவலான வுடன் காணாமல் போயின.

ANTON, MASHA, AND GRIB NEVALYASHKA ROLY-POLY DOLLS // 1956-1970s

இப்பொம்மைகளை (வாங்கா -ஸ்டாங்கா) தள்ளிவிட்டாலும் எழுந்து நிற்கும். இக்ருஸ்கா அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த இப்பொம்மை களின் பெயர் ஆன்டன், மாஷா, கிரிப் நெவாலையாஸ்கா.