பிட்ஸ்!




*நிலப்பரப்பில் ரஷ்யாவுக்கு அடுத்து பெரிய நாடு கனடா.

*யேல் பல்கலையிலுள்ள வூல்சே அரங்கத்தில் நல்ல அகலமான சீட் உள்ளது. இந்த சீட், முன்னாள் பேராசிரியர் வில்லியம் ஹோவர்ட் டஃப்ட் என்பவர் அமரவென உருவாக்கப் பட்டது.

*ஸ்டார்வார்ஸ் படத்தில் வரும் யோடா கதாபாத்திரம், ஐன்ஸ்டீனின் முக அமைப்பை பெருமளவு நகலெடுத்து உருவாக்கப்பட்டது.

*பூனைகள் இரவில் பார்க்கும் தன்மைக்கு tapetum lucidum எனும் கட்டமைப்பே காரணம். ஒளியை பிரதிபலிக்கும் தன்மையால் இரவில் பூனையின் கண்கள் பளிச்சிடுகின்றன.
 
*படுமோசமான ஓவியங் களை வைப்பதற்கெனவே மசாசூசெட்சில் Museum of Bad Art (MOBA) அருங்காட்சியகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.