ட்ரைக்ளோசன் ஆபத்து!



தினசரி பயன்படுத்தும் பற்பசை, சோப், சமையல்பொருட்கள் முதற்கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படும் பாக்டீரிய எதிர்ப்பு வேதிப்பொருள் ட்ரைக்ளோசன், குடல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ட்ரைக்ளோசன் குடல் அழற்சி மற்றும் புற்றுநோயை எலி களுக்கு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டதால் இதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த விதிகள் உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளது.

அமெரிக்காவில் 75 சதவிகித மனிதர்களின் சிறுநீரில் ட்ரைக்ளோசன் கண்டறியப்பட்டுள்ளதோடு, ஆறுகளை மாசுபடுத்தும் டாப் 10 பட்டியலிலும் இந்த வேதிப்பொருள் இடம்பிடித்துள்ளது.

மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் ட்ரைக்ளோசன் பயன்பாடு குடல் புற்றுநோயை ஊக்குவிப்பதைக் கண்டறிந்தனர். மனிதர்களுக்கு ரத்தக்கசிவு, வயிற்றுவலி, பிடிப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.