அறிவிப்பு பலகைகள் என்ன சொல்கின்றன?இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அமெரிக்காவில் தரைப்போக்குவரத்தில் தனித்தனி சாலைகள், ஓட்டுநர் உரிமம், அறிவிப்புப்  பலகைகள் என எவையும் உருவாகவில்லை. 1915 ஆம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் வெள்ளை நிறத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

1923 ஆம் ஆண்டு மிசிசிபி நெடுஞ்சாலைத்துறை, சாலை அறிவிப்பு பலகைகளை அடுத்துவரும் சாலைகளுக்கேற்ப மாற்றினால் என்ன என்று அட்வான்சாக யோசித்தது. அதன்படி உருவான அறிவிப்புப் பலகை தொடர்ந்து அப்டேட்டாகி வருகிறது.

அறிவிப்புப் பலகையில் எத்தனை பக்கங்கள் உள்ளதோ அத்தனை வளைவான சாலைகளை பயணி சந்திக்கப்போகிறார் என புரிந்துகொள்ளலாம். சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதன் அலைநீளமே முக்கியகாரணம்.வட்டவடிவம் (ரயில்பாதை), ஆக்டகன் வடிவம்  (இணைப்புச்சாலை), செவ்வகம் (முக்கிய அறிவிப்பு) என புரிந்துகொண்டால் வேகம் குறைத்து பயண சந்தோஷத்தின் உச்சத்தைத் தொடலாம்.