இந்திய ஆளுமைகள் 2018!சர்மிளா பட்டாச்சார்யா, அறிவியலாளர்

நாசாவின் நட்சத்திர விஞ்ஞானி. ஸ்டான்ஃபோர்டு, பிரின்ஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உயிரியல் டிகிரிகளை வென்ற சர்மிளா கொல்கத்தாக்காரர். விண்வெளிக்கு பழ ஈக்களைக் கொண்டு சென்று மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அறியும் ஆராய்ச்சி இவருடையது.

மனிதர்களின் டிஎன்ஏவில் 75% ஒற்றுமை கொண்ட ஈக்களை கலிஃபோர்னியாவிலுள்ள நாசா ஆய் வகத்தில் தேர்ந்தெடுத்தார் சர்மிளா. விமானி தந்தைக்கு மகளான சர்மிளாவுக்கு விமானியாவது பால்ய லட்சியம். தற்போது விமானப் பாதுகாப்பு நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

ஷயாரோ பனோ, முத்தலாக் வழக்குதாரர் இஸ்லாம் சமயத்தில் பெண்களைக் கடுமையாக பாதித்த முத்தலாக்கை உச்சநீதிமன்றத்தில் கேஸ் போட்டு தடுத்து நிறுத்திய போராளி. ஷயாரோ பனோவும் கணவரின் தலாக் அறிவிப்பை விரைவுத்தபாலில் பெற்று வாழ்க்கையை இழந்தவர்தான். முதலில் வழக்கு தள்ளுபடியானாலும் விடாமுயற்சியோடு ஷயாரோ பனோ தொடர்ந்த வழக்கு ஆணாதிக்கத்தால் துயருற்ற பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு சட்டரீதியில் விடியல் தந்தது.

அவானி சட்டர்ஜி, போர்விமானி

இந்திய ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முன்னர் தடை இருந்தது. காலமாற்றத்தில் இன்று இந்திய விமானப்படையில் போர்விமானியாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் பணியேற்றார். போர்விமானங்களைக் கையாளும் 3 பெண் விமானிகளில் அவானியும் ஒருவர்.

 பிரான்சு, நிசாந்த் பட்னி, தொழில்முனைவோர்

ஜெய்ப்பூரைச்  சேர்ந்த  பிரான்சு மற்றும் நிசாந்த் பட்னி 2012 ஆம் ஆண்டு தொடங்கிய கல்ச்சர் அலே நிறுவனத்தின் பயனர் எண்ணிக்கை 43 மில்லியன். இந்தி, சீன மொழி பேசுபவர்களும் எளிதாக ஆங்கிலத்தை கற்கவைப்பதுதான் பிரான்சு, நிசாந்தின் லட்சியம். 2014 ஆம் ஆண்டு தொடங்கிய ஹலோ இங்கிலீஷ் ஆப் செம ஹிட். விப்ரோ, டோமினோ பீட்ஸா ஆகிய நிறுவன பணியாளர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

பிரஸூன் ஜோஷி, பாடலாசிரியர், சென் சார்போர்டு தலைவர்பஹ்லஜ் நிக்லானிக்குப் பிறகு சென்சார் போர்டின் தலைவரான பாடலாசிரியர் பிரஸூன் ஜோஷி, சர்ச்சைகளின்றி அதனை நடத்துகிறார். விளம்பர உலகைச் சேர்ந்த பிரஸூன் ஜோஷி ‘பத்மாவத்’ திரைப்படத்தில் அதிக வெட்டு களின்றி படத்தை வெளியிடச் செய்தார். பாஜக அரசின் பல்வேறு பிரசார நிகழ்ச்சிகளை டிசைன் செய்து நடத்திய அனுபவம் கொண்டவர் பிரஸூன் ஜோஷி.