இந்தியாவின் ரகசிய திட்டங்கள்!
Operation Chanakya  

காஷ்மீரில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவான இக்வான் உல் முஸ்லீமின், முஸ்லீம் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு அமைப்புகளை ரா(RAW) உருவாக்கிய திட்டம்.  
 
Baloch Game  

காஷ்மீரில் குடைச்சல் கொடுக்கும் பாக்கின் ஐஎஸ்ஐ ரூட்டை அப்படிக் காப்பியடித்து  பலுச்சிஸ்தானில் செயல்படுத்தியது ரா அமைப்பு. 1980 ஆம் ஆண்டிலிருந்து Team X என்ற பெயரில் ஆயுதங்களையும், கரன்சிகளையும் அள்ளிக்கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட பலுச்சிஸ்தான் போராளிளைத் தூண்டுகிறது.
 
Operation Leech   

மியான்மரிலிருந்த காச்சின் விடுதலை ராணுவத்திற்கு(KIA) ரா அமைப்பு பயிற்சி அளித்தது. பின்னாளில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி கெடவும் இச்செயல் மூலஆதாரம்.  இவ்வமைப்பின் 6 முக்கிய தலைவர்களைக் கொன்று 34 கொரில்லாக்களைக் கைது செய்து அமைப்பை முடக்கியது ரா.
 
Bangala Partition  
பாகிஸ்தானுக்கு ஆதரவான லயோனல் ஜெனரல் எர்ஷாத்துக்கு எதிராக ஷேக் ஹசீனா, கலிதா ஸியா ஆகியோரை இணைத்து ஜனநாயகம் காக்க என்று கூறி ஆபத்தான அரசியல் விளையாட்டை ரா அமைப்பு விளையாடியது.